இணையமலர் செய்திகள்

இங்கே கிளிக் செய்யவும்..

Tuesday, January 25, 2011

எம்.ஜி.ஆர் 100



ஆசிரியர்: சபீதா ஜோஸப்
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 641 Views
விலை:  ரூ.95

 நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105 ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை -14.போன் : 28482424, பக்கங்கள்: 176  

கம்பனில் சமய நல்லிணக்கம்



ஆசிரியர்: மு.சாயபு மரைக்காயர்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 113 Views
விலை:  ரூ. 75

 வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017.  

பழங்களும் அதன் மருத்துவப்பயன்களும்



ஆசிரியர்: சிவரஞ்சன்
வெளியீடு: சுரா பதிப்பகம்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 113 Views
விலை:  ரூ. 45

 வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இ மெயில்: enquiry@surabooks.com வெப்சைட்: www.surabooks.com  

சிங்காரவேலரும் பகுத்தறிவும்



ஆசிரியர்: நெ.து. சுந்தரவடிவேலு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 91 Views
விலை:  ரூ.30

 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை- 600098. போன் : 26251968, 26258410.  

OPEN YOUR UMBRELLA



ஆசிரியர்: சபாராம்
வெளியீடு: அல்கெமி
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 15 Views
விலை:  ரூ.225

 
அல்கெமி, 48/11, 4வது தெரு, பார்வதி அவன்யூ, சக்தி நகர், போரூர், சென்னை - 116 (பக்கம்: 186)
தகவல் தொழில்நுட்ப தொழிலில் பணியாற்றுவோர் பணிகளில் மேம்பாடு அடைய வழிகாட்டும் நூல். இத்தொழிலில் பணியாற்றும் பலருக்கு கவுன்சிலிங் செய்த அனுபவம்மிக்க ஆசிரியர், எளிதாக பல சிக்கல்களை விளக்குகிறார். அதனால் ஒரு நிறுவனத்தில் பாஸ் வெறுக்கும் தொழிலாளர் நிலை, ஆபீஸ் அரசியலில் சிக்காமல் தப்புவது எப்படி?

தலைமைப் பொறுப்பை அடைய விரும்பினால் அதை எப்படி நிறைவேற்றுவது என்று பல தலைப்புகளாக சிறப்பாக அலசுகிறார். எப்படி ஒரு கூட்டுக் குடும்பத்தில் மோதல் வருமோ, அதேமாதிரி தான் அலுவலகமும் என்றும் விளக்குகிறார். குடும்பத்தை சமாளிப்பது போல பணியிடத்திலும் சமாளிக்க வழி கூறுகிறார். (பக்கம் 113)

நீங்கள் எவ்வளவு தான் கெட்டிக்காரராக இருந்தாலும், உங்களை விட கெட்டிக்காரர் இருப்பார். அவர் வயதில் இளையவரானாலும், அவரிடம் விஷயத்தை தெரிந்து கொள்வதில் தவறில்லை. (பக்கம் 137)

போட்டி உலகில் வேலைப்பளுவை சுமக்கும் பலருக்கும் பயன்படும் தகவல்கள் இந்நூலில் உள்ளன. அதனால் தான், அட்டையில் மழை நேரத்தில் பாதுகாப்பாக குடையுடன் இருக்கும் இளைஞர் படம் உள்ளது போலும். 

தகவல் பெறும் உரிமைச் சட்டம்



ஆசிரியர்: சி.எஸ்.தேவ்நாத்
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 624 Views
விலை:  ரூ 60

 நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, சென்னை-600017. பக்கம்:160.

மத்திய மாநில ஆணையங்களின் அதிகாரிகள் சட்டவிதிகள், துறைகளின் முகவரிகள் அடங்கியுள்ள நூல். நாம் செலுத்தும் வரிப்பணம் எப்படி, யாரால் செலவழிக்கப்படுகிறது? வசிக்கும் தெருவின் மேம்பாட்டுக்கு செலவழித்த தொகை நியாயமானதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு விண்ணப்பத்தின் மூலம் 48 மணி நேரத்திலேயே தேவையான தகவல்களை நாம் பெற்றுவிட வழிகாட்டுகிறது. துறை சார்ந்த முகவரிகள் இருப்பது இந்நூலின் சிறப்பு.
 

ஸ்டெம் செல்கள்



ஆசிரியர்: இளங்கோ
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 149 Views
விலை:  ரூ.50

  பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104)

செல் என்றால் என்ன? மரபணு, டி.என்.ஏ., குரோமோசோம் என, செல் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூறி, மரபணு மாற்றம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்நூல் விளக்குகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் விளையும் நன்மைகள், தீமைகளை விளக்கி, மன்சான்டோ நிறுவனத்தையும் "விளாசி தள்ளுகிறார் ஆசிரியர்.
மேலும், சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பு, குளோனிங் முறை, வேர் செல்கள் பற்றிய விவரங்களையும் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.